• Dec 26 2024

பிக்பாஸ் வீட்டிலிருந்து இறுதியாக வெளியேறிய விஜய் வர்மா பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் விஜய் வர்மா, மாயா, விஷ்ணு விஜய், தினேஷ், மணிச்சந்திரா, அர்ச்சனா ஆகிய 6 பேர் இறுதி வாரத்தில் இருந்தனர்.இறுதியாக இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி விஜய் வர்மா வெளியேறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடமும் அதிகமாக உள்ளது.இந்த நிகழ்ச்சியின் பைனல் நெருங்க நெருங்க, எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட் ஆக எண்ட்ரி கொடுத்தவாறு இருக்கின்றனர்.


 நேற்று முதல் ஆளாக அனன்யா ராவ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். இதையடுத்து அக்‌ஷயா மற்றும் வினுஷா ஆகியோர் எண்ட்ரி கொடுத்தனர். அடுத்ததாக சரவண விக்ரம் எண்ட்ரி கொடுத்தார்.இவரின் வருகையைத் தொடர்ந்தே விஜய் வர்மா எலிமினேட் ஆனார். 

ஏற்கனவே எலிமினேட் ஆகி மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த விஜய் வர்மா, தற்போது எலிமினேட் ஆகி உள்ளதால் நூலிழையில் பைனல் செல்லும் வாய்ப்பை மிஸ் பண்ணி உள்ளார்.இருந்தாலும் பிக்பாஸ் அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 


அதன்படி விஜய் வர்மாவுக்கு ஒரு நாளை ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். இதனால் ஆரம்பத்தில் இருந்த 21 நாட்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் சம்பளமாக வாங்கிய விஜய் வர்மா, அடுத்ததாக வைல்டு கார்டாக வந்து தங்கி இருந்த 44 நாட்களுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் என மொத்தமாக ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வாங்கி உள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement