கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படமான சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் மேலும் பரபரப்பாக இருக்கின்றது ஏனெனில் இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.
நீண்டகால இடைவெளியின் பின்னர் இவர்கள் சேர்ந்து நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப் படத்திற்கு சாய் அபயங்கார் அறிமுக இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் அஜூ வர்கீஸ் மற்றும் இந்திரன்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இப் படத்தில் சூர்யா மற்றும் rj பாலாஜி இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் லப்பர் பந்து நாயகி சுவாசிகா,ஜோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
Listen News!