• Jun 12 2026

சூப்பர் சிங்கரில் காயத்ரி win பண்ணக் காரணம் என்ன தெரியுமா.? பாடகி சாராஸ்ருதி ஓபன்டாக்..!

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டி, இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பாகத் தோன்றிய போட்டியாளர்களில் ஒருவர் சாராஸ்ருதி. இளம் வயதிலேயே தனது மென்மையான குரலில் ரசிகர்களைக் கவர்ந்த இவர், இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றார்.


சமீபத்தில் அவர் வழங்கிய ஒரு நேர்காணலில், சூப்பர் சிங்கர் போட்டியின் அனுபவங்களை உணர்ச்சிமயமாக பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் தெரிவித்த முக்கிய கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டதை நினைவுகூரும் சாராஸ்ருதி, “அந்த நாள் எனக்கு காய்ச்சல் இருந்தது. உடம்பு சரியில்லாத நிலையிலும் பாட முயற்சி செய்தேன். ஆனால் அந்த நாள் எப்பவுமே என் மனதில் இருக்கும்,” என்றார்.


அத்துடன், “நான் 2nd finalist ஆவேன் என்ற எதிர்பார்ப்பு கூட எனக்கு இல்லை. என் பாட்டை ரசித்து பலரும் எனக்கு ஆதரவு தெரிவித்ததை நினைக்கும் போது, எனக்கு பெருமையாக இருந்தது.,” என்று அவர் சொல்லும் விதத்தில், அந்த நிகழ்வின் தாக்கம் இன்னும் அவரை விட்டுப் போகவில்லை என்பது வெளிப்படுகிறது.

சூப்பர் சிங்கர் சீசன் 10 இன் டைட்டில் வென்ற காயத்ரி குறித்து பேசும் போது, சாராஸ்ருதி மிக நேர்மையாகவும், மிக அன்புடன் பாராட்டினார். “காயத்ரி மிமிக்கிரி குயின் மாதிரி. பாடல்களில் இருந்த உணர்வுகளை அவர் எப்படி சினிமா டச் கொடுத்து மேடையில் காட்டுறாங்கன்னு பாக்கும்போது நாமல்லாம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. அதனாலதான் அவங்க Win பண்ணினாங்கன்னு நம்புறேன்,” என்றார்.


இந்த வார்த்தைகள் மூலம், போட்டியாளராக இருந்தாலும் ஒருவரை அன்புடன் பாராட்டக்கூடிய மனப்பான்மை சாராஸ்ருதியிடம் இருப்பது தெளிவாகிறது. இந்த வீடியோ தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement