• Apr 18 2026

16 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7-வது சீசன் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ளதால் இறுதிப்போட்டியில் வென்று டைட்டிலை தட்டித்தூக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தற்போது பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா ஆகிய நான்கு பெண் போட்டியாளர்களும், விஷ்ணு விஜய், விஜய் வர்மா, தினேஷ், மணி ஆகிய நான்கு ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இதில் விஷ்ணு விஜய் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துவிட்டதால், அவர் நேரடியாக பைனலுக்குள் நுழைந்துவிட்டார். அவரைத்தவிர எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களும் இந்த வார எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆகி உள்ளனர். 


இதனிடையே இந்த வாரம் பணப்பெட்டி ஒன்றை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் பிக்பாஸ். இந்த பேட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு தற்பொழுது 16 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் யார் இதனை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.

அதனன்படி பூர்ணிமா 16 லட்சத்துடன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இந்த ஸ்மாட் மூவுக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement