• Apr 18 2026

கோட்டில் நீதிபதிக்கு முன்னால் ஈஸ்வரி செய்த சேட்டை, அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா மற்றும் கோபி- Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

சீரியலின் கதைப் படி கோபி மீண்டும் ராதிகா உடன் பாக்யாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ராதிகா பாக்கியாவுடன் சண்டை போடாமல் பாக்கியாவுக்கு ஆதரவாக இருப்பது தான் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது செழியன்-ஜெனி, எழில்-அமிர்தா திருமண வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் வந்திருக்கிறது. இதனால் கதை தற்போது பரபரப்பாக நகர தொடங்கி இருக்கிறது.


இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜெனி மற்றும் செழியனுக்கான வழக்கு நடக்கின்றது. அதில்,செழியன் ஜெனியை ரொம்பவே கொடுமைப்படுத்தியிருக்கிறார் என்று ஜெனி தரப்பு வக்கீல் வாதாடுகின்றார்.

இதைக் கேட்ட ஈஸ்வரி எழுந்து நின்று ஜெனியின் அப்பாவைத் திட்டுகின்றார்.அப்போது நீதிபதி இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் பேசக் கூடாது என்று சொல்ல,ஈஸ்வரி நீதிபதியையே எதிர்த்துப் பேசுகின்றார். இதைக் கேட்ட கோபியும் பாக்கியாவும் அதிர்ச்சிடைகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement