தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் பல படங்களில் காமெடியன் கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்த சூரி கடந்த வருடம் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை' படத்தில் கதாநாயகனாக பிரவேசித்தார். அந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அவரின் அடுத்த படமான 'மாமன்' படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இந்த 'மாமன்' படத்தை 'விலங்கு' வெப் தொடர் மூலம் பெயர் பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வருகின்றார். மேலும், 'கருடன்' திரைப்படத்தை உருவாக்கிய லார்க் ஸ்டுடியோ நிறுவனம் தான் இந்தப் படத்தையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாரிக்கின்றது.
'மாமன்' திரைப்படம் ஒரு பரிசுத்தமான குடும்ப உணர்வை பேசும் படமாக உருவாகி வருவதுடன் இதில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்து வருகின்றார். மேலும், ஸ்வாசிகா என்பவர் சூரியின் தங்கையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றார்.
இந்நிலையில், சூரி நடித்துக் கொண்டிருக்கும் 'மாமன்' படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல நடிகரும், ரசிகர்களின் பிரியமான ஹீரோவுமான சிவகார்த்திகேயன் அண்மையில் சென்றுள்ளார். அதன்போது சிவகார்த்திகேயன் படம் பற்றியும், சூரி மற்றும் படக்குழுவினரின் செயற்பாடுகளையும் நேரில் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த அரிய நிகழ்வை சூரி தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Thanks a lot Thambi @Siva_Kartikeyan for spreading your love and gracing us with your presence on the #Maaman sets. Your aura brought so much happiness and joy to all of us.❤️ pic.twitter.com/qDVtk8PE7R
Listen News!