• Dec 27 2024

அஜித்தின் ராஜா படத்தில் நடித்த பிரியங்காவை நினைவிருக்கின்றதா?- இப்போது எப்பிடி இருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பெங்காலி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியவர்தான் நடிகை பிரியங்கா திரிவேதி. இதனைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இந்த படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்த திலீப்பிற்கு காதலியாக இவர் நடித்திருப்பார். 


தொடர்ந்து  அஜித்குமார், ஜோதிகா, வடிவேலு, மதன் பாப், நளினி நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருப்பார். பிளாஷ்பேக் காட்சியில் வரும் இவர் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


பின்னர் விக்ரம் ஜோடியாக காதல் சடுகுடு படத்திலும் அவர் நடித்து இருந்தார். ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்துவிட்டதனால் கன்னட நடிகர் உபேந்திராவை பிரியங்கா திரிவேதி திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.


இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement