• Dec 27 2024

சூப்பர் ஸ்டார் பட்டமே வேஸ்ட்,அதை இந்த நடிகருக்கு கொடுங்க- புதிய சர்ச்சையைக் கிளப்பிய மரியான் பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பூ என்னும்திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பார்வதி திருவோத்து. இதனைத் தொடர்ந்து  மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் என பல படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சினையில் சிக்கி வருவதும் உண்டு. இந்த நிலையில் இவர் சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி பேசி இருக்கும் விஷயம் சர்ச்சையாகி இருக்கிறது.


சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லை. டைம் வேஸ்ட் தான். அந்த பட்டத்தால் பயன் அடைந்த யாராவது இருக்கிறார்களா. யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை."


"சூப்பர்ஸ்டார் என சொல்வதை விட சூப்பர் நடிகர் என்று சொல்வதை தான் விரும்புகிறேன். அந்த பட்டத்தை பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களுக்கு கொடுக்கலாம்" என பார்வதி கூறி இருக்கிறார்.அவரது பேட்டி தற்போது சர்ச்சையாகி சமூக வலைத்தளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.  


Advertisement

Advertisement