• Mar 06 2025

உங்களுக்கு பார்ட் டைம்மா நான் வேணுமா.? ஒரு கணம் கோபி கண்முன் தோன்றிய ஃப்ளாஷ் பேக்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ராதிகா நீதிமன்றத்தில் வைத்து தனக்கு கோபியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என உறுதியாக சொல்லுகின்றார். இதை கேட்டு கோபி ஒரு கணம் ஆடிப் போகின்றார். மேலும் கோபியிடம் என்ன முடிவு என்று நீதிபதி கேட்கவும் எந்த பதிலும் சொல்லாமல் தடுமாறிக் கொண்டுள்ளார்.

இதனால் இந்த வழக்கை அடுத்த மாதம் தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிடுகின்றார். அதன்பின்பு வெளியே வந்த கோபி, உன்ட மனசு மாறியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஏன் இப்படி  செய்கிறா.. கூட சேர்ந்து வாழத்தானே விரும்புகிறேன் என்று எமோஷனலாக பேசுகின்றார்.

மேலும் மீண்டும் தனது வீட்டிற்கு அருகிலேயே வருமாறு கோபி சொல்ல, அப்படி என்றால் உங்களுக்கு என்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை..முழு நேரமும் உங்களுடைய வீட்டில் நீங்க இருக்க வேண்டும்.. பார்ட் டைம் மாதிரி எனது வீட்டையும் வரவேண்டும்.. இதுதான் உங்களுடைய பிரச்சனை.. என்று கோபிக்கு பதிலடி கொடுக்கிறார். 


இறுதியில் உங்களுக்கு என்னை பிடிக்கும் என்றால் தயவு செய்து இந்த வழக்கை இழுத்தடிக்காமல் எனக்கு டிவோசை கொடுங்கள் என்று சொல்லுகின்றார் ராதிகா.

அதன் பின்பு ராதிகா செல்லும்போது அங்கு பாக்கியா வருகின்றார். அவர்கள் இருவரும் அங்கிருந்து கதைத்துக்கொண்டு இருக்க இதனை பார்த்த கோபி, பாக்யாவுக்கு விவாகரத்து கொடுத்த போது நடந்த சம்பவங்களை மீண்டும் நினைவூட்டி பார்க்கின்றார். இதனால் அவர் கைகள் நடுங்கி வேர்த்து விறுவிறுத்து வீட்டுக்கு செல்கின்றார்.

கோபி வீட்டிற்கு சென்றதும் நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்று ஈஸ்வரி கேட்டு தெரிந்து கொள்கின்றார் . மேலும் மையூ  உன்னுடைய பிள்ளை இல்லை தானே.. என்ன நடந்தாலும் உனது ரத்தம் தான் உனக்கு துணையாக இருக்கும் என்று கோபிக்கு அட்வைஸ் பண்ணுகிறார் ஈஸ்வரி. இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement