சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாஸில் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை அல்லு அர்ஜுன் பார்க்க வந்த நிலையில், அங்குள்ள கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அல்லு அர்ஜுன் குறித்த குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார்.
எனினும் தனது மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், அல்லு அர்ஜுன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டா.ர் அவருடன் சந்தியா தியேட்டர் ஓனர் மற்றும் தியேட்டர் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது அங்கே நடைபெற்ற வழக்கின் முடிவில் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறை வைப்பதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
d_i_a
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், இப்போது நான் பார்ப்பதை எல்லாம் என்னால் நம்ப முடியவில்லை.. புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியின் போது ஒருவர் உயிரிழந்தது துரதிஷ்டவசமான ஒன்று.. வருத்தமான ஒன்றும் கூட.. ஆனாலும் எல்லாப் பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தம் அளிக்கிறது... என அல்லு அர்ஜுனின் கைது தொடர்பில் நடிகை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.
Listen News!