• Jan 08 2025

சித்தார்த் - அதிதி ராவுக்கு இத்தனை கோடிகள் சொந்தமா? சொகுசு வீடுகள் வேறு..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர், ஆயுத எழுத்து படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து தனது திரையுலக வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சித்தார்த், தற்போது தனக்கேற்ற தனித்துவம் வாய்ந்த கதை அம்சங்களை கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் இவர் நடித்த சித்தா திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக நிறைய இடங்களில் ப்ரொமோஷனும் பண்ணி இருந்தார் சித்தார்த்.

இவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை மேக்னா என்ற பெண்ணை 2003இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. மூன்று வருடங்களின் பின் இருவரும் தனித்தனியாக வாழ ஆரம்பித்தார்கள். 2007 இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.


அதன் பின், நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வந்தார் சித்தார்த். அண்மையில் தான் அதிதி ராவ் தனக்கு சொந்தமானவர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது .

அதன்படி அதிதி ராவ் ஹைதராபாத்தில் ஒரு மாளிகையும், மும்பை வெர்சோவாவில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பையும் அவர் வைத்திருக்கிறார். Audi Q7, Mercedes-Benz QLS, BMW X7 உள்ளிட்ட ஆடம்பர சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார்.

அதேபோல், சித்தார்த்தின் நிகர மதிப்பு சுமார் 70 கோடி என்று கூறப்படுகிறது. இவருக்கும் ஹைதராபாத் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சொகுசு வீடுகள் உள்ளது.

மேலும், ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஏ4 கார்கள் உள்ளிட்ட ஆடம்பர வாகனங்கள் உள்ளன. சித்தார்த் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. 

எனவே அதிதி ராவ் ஹைதரி - சித்தார்த் இருவரின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement