தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சம்யுக்தா சண்முகநாதன். பல தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற அவர், கடந்த ஆண்டு தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அனிருதா ஸ்ரீகாந்த் உடன் அவர் திருமணம் செய்து கொண்டது அப்போது ரசிகர்களிடையே பெரிய செய்தியாக பேசப்பட்டது.

இந்த திருமணம் இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையில் பல அனுபவங்களை சந்தித்த பிறகு, புதிய வாழ்க்கையை தொடங்கிய இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
சம்யுக்தா சண்முகநாதனுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகனும் இருக்கிறார். தற்போது அந்த மகனுடன் சேர்ந்து, அனிருதா ஸ்ரீகாந்துடன் குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக அவர் பல நிகழ்ச்சிகளில் தெரிவித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் அடிக்கடி பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்யுக்தா தனது திருமணத்துடன் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். குறிப்பாக தனது மாமனார், திருமணத்தின் போது தங்களுக்கு வழங்கிய முக்கியமான அறிவுரையை பற்றி அவர் திறந்த மனதுடன் பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அவரிடம் குடும்ப வாழ்க்கை பற்றி கேள்வி கேட்டபோது, சம்யுக்தா மிகவும் நேர்மையாக தனது அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “இரண்டாவது திருமணம் என்பது எப்போதும் எளிதானதாக இருக்கும். ஏனென்றால் அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்காது. சுற்றியுள்ளவர்கள் கூட ‘நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?’ என்ற கேள்வியைத் தான் கேட்பார்கள்.”
ஆனால் திருமணத்தின் போது தனது மாமனார் ஒரு முக்கியமான விஷயத்தை கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். “இரண்டாவது திருமணம் என்பது எப்போதும் எளிதாக இருக்கும். பெரிய எதிர்பார்ப்புகள் இருக்காது. உங்களுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இதை காமெடியாக எடுக்காதீர்கள். இதையும் பிரேக் அப் செய்து விட்டு மூன்றாவது திருமணத்திற்குப் போகலாம் என நினைக்காதீர்கள். உங்கள் உறவுக்கு எது சரியாக வருமோ அதையே செய்யுங்கள் என்றார். ” என சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
இந்த நேர்மையான அறிவுரை தான் தனது மனதில் இன்னும் நிற்கிறது என்றும், குடும்ப வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
Listen News!