• Jun 16 2026

இத்தனை காலமாய் மறைக்கப்பட்ட உண்மை.! விஜய் பேசிய வார்த்தையால் நிலைகுலைந்து போனாரா இந்திரஜா?

shali / 5 hours ago

Advertisement

Listen News!

நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா, நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் பகிர்ந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது முதல் திரைப்படமான பிகில் படப்பிடிப்பு அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், விஜய்யுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “பிகில் படப்பிடிப்பின் போது விஜய் சார் என்னிடம் ‘உன்னை குண்டம்மா என்று கூப்பிடலாமா?’ என்று கேட்டார். அந்த வார்த்தையை அவர் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பயன்படுத்தினார். அதன் பிறகு ‘குண்டம்மா’ என்ற சொல்லை பலரும் ஒரு செல்லப் பெயராகவே பார்க்க ஆரம்பித்தனர்” என்றார்.


மேலும், ஒரு காலத்தில் உடல் தோற்றத்தை கிண்டல் செய்ய பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்ட அந்த வார்த்தை, விஜய் பயன்படுத்திய விதத்தால் அன்பை வெளிப்படுத்தும் சொல்லாக மாறியதாகவும் இந்திரஜா தெரிவித்தார். அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சிலர் இந்திரஜாவின் கருத்தை ஆதரித்து விஜய்யின் எளிமையையும் பாசமான அணுகுமுறையையும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், உடல் அமைப்பை குறிப்பிட்டு அழைப்பது எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்து வருவதால் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement