தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'டிராகன்' திரைப்படம், டிக்கெட் விற்பனை மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படமே அதிகளவு வசூலைப் பெற்றிருந்தது. ஆனால் 'டிராகன்' தற்போது அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது
டிராகன் படம் வெளியாகி 2 நாட்களிலே 2.88 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இது தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய விற்பனையாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிக டிக்கெட் விற்பனை நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் 1.46 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. ஆனால், 'டிராகன்' இப்படத்தை முந்தி, 2.88 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து புதிய சாதனையை செய்துள்ளது.
பிரமாண்டமான திரைக்கதை மற்றும் படம் முழுவதும் அதிரடியான கதைக்களம் கொண்டதாக இருப்பதனாலேயே இத்தகைய டிக்கெட்டுக்களை விற்பனை செய்ய முடிந்ததாக படக்குழு கூறுகின்றது. அத்துடன் பிரதீப்பின் மாஸான தோற்றம் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!