லவ் டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான 'டிராகன்' திரைப்படம் வெளியான முதல் வாரத்திலிருந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று சாதனை படைத்து வருகிறது. இப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் மேனன் மற்றும் மிஸ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் நாளிலிருந்து வசூலில் தொடர்ந்து அதிகரிப்பு கண்டு வரும் இப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்போது, 'டிராகன்' ரூ. 100 கோடி வசூல் சாதனையை விரைவில் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதைவிட பிரதீப் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வரும் ஒரு நடிகர் மற்றும் இரண்டு படங்கள் மாத்திரமே இவர் நடித்த நிலையில் வசூலில் இத்தனை கோடி சாதனை படைத்து வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இன்னும் குறிப்பிட நாட்களுக்குள் 100 கோடி சாதனை படைத்து முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!