• Jan 08 2025

ஒரு வருஷமா பச்ச தண்ணி மட்டும் குடிச்சு நடிச்சாரு பிரஸ் மீட்டில் விஷாலை புகழ்ந்த சுந்தர்.சி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மதகஜராஜாவின் ரிலீஸை முன்னிட்டு இந்த படத்திற்கான பட ப்ரொமோஷன் பணிகள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் இந்த படத்திற்கான பிரஸ் மீட் நடைபெற்றது. இதன் போது இடம்பெற்ற சம்பவங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில், குறித்த பிரஸ் மீட்டில் சுந்தர். சி விஷாலை பற்றி பேசும்போது விஷால் எமோஷனலாகி கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளன.. 

ஏற்கனவே விஷால் கடும் காய்ச்சலுடன் குறித்த நிகழ்வில் பங்கு கொண்டபோது அவருடைய கைகள் நடுங்கி, உடல் சோர்வாக காணப்பட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது.


இவ்வாறான நிலையில் சுந்தர். சி விஷாலைப் பற்றி பேசிய விடயங்கள் வைரலாகியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில், மதகஜராஜா திரைப்படம் எனக்கு ரொம்பவும் முக்கியமான திரைப்படம்.

ஏனென்றால் எனக்கு இந்த படத்தின் மூலம் தான் உடன்பிறவாத தம்பி விஷால் கிடைத்தார். அவர் எங்க குடும்பத்துல ஒருத்தராகவே மாறிவிட்டார்.


இந்த படத்துல என்னை விட விஷால் ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். இதுல விஷாலுக்கு சிக்ஸ் பேக் வைக்க சொல்லி இருந்தேன். அவரும் அதனை மெயின்டென்ட் பண்ணினார். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் சும்மா ஒரு வருஷம் கிட்ட தள்ளிப் போனது.

அதுவரைக்கும் பச்ச தண்ணி குடிச்சி சிக்ஸ் பேக்க மெயின்டென்ட் பண்ணினார். இது ரொம்ப கஷ்டமான விஷயம். மதகஜராஜா திரைப்படம் வெளியாவதற்கு நான் முழுமூச்சா பாடுபடுவதற்கு காரணமே விஷாலின் உழைப்பை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். 

இந்த படத்திற்காக அவர் உசுரையே கொடுத்து நடித்தார். அவர் பட்ட கஷ்டத்தை மக்கள் பார்க்க வேண்டும். அதனை மீடியாக்களும் வெளியே கொண்டுவர வேண்டும் என்று விஷாலை பற்றி பெருமையாக பேசியுள்ளார் சுந்தர் சி.

Advertisement

Advertisement