• Dec 26 2024

எடுங்கடா வண்டிய கேரளாவுக்கு... படையெடுக்கும் ரசிகர்கள்... 4 மணிக்கு கோட் ரிலீஸ்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் செப்டெம்பர் 5 உலகெங்கிலும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் முதல் சோ வெளியாகும் நேரம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது.


அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காது என்றே தெரிகிறது. லியோ படத்திற்கு நடைபெற்றதை போல படம் வெளியான பின்னர் பிரம்மாண்டமாக வெற்றி விழாவை விஜய் நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 146 கோடி வசூல் செய்து சாதனை படைக்க முக்கிய காரணமே விஜய்க்கு ஓவர்சீஸில் இருக்கும் மார்க்கெட் தான்.  


கோட்ட திரைப்படம் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கே வெளியாகிறது என்கிற அசத்தலான அறிவிப்பு தற்போது வெளியாகி கேரளா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற போது, விஜய்யை காண ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கே திரண்ட காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களையே ஷாக் ஆக்கியது. 


வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை கோட் படம் நிகழ்த்தும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவுக்கு அருகே இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் கேரளவுக்கு படையெடுக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement