• Dec 28 2024

எலெக்சன் படம் எந்த பிரசாரத்தையும் செய்யவில்லை! படத்தில் நடிப்பவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர் விஜய்குமார் பேச்சு !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டில் வெளியான உறியடி திரைப்படத்தின் ஊடக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய்குமார். இயக்குனராக மட்டுமன்றி நடிகராக பாடலாசிரியராக அனைவரையும் வியக்க வைத்து உறியடி புகழ் விஜய்குமாராக அனைவர் மனங்களையும் வென்றார்.


தொடர்ந்து உறியடி 2,பைட் கிளப் ஆகிய சமூக கருத்துடனான ஆக்ஷன் திரில்லர் படங்களில் நடித்த விஜய்குமார் ‘சேத்துமான் ’திரைப்படம் ஊடாக புகழ் பெற்ற  இயக்குநர் தமிழுடன் எலெக்ஷன் என்ற படத்தில் இணைத்தார்.திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில் படம் மே 17 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கதாநாயகனான விஜய்குமார் “அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற படம் தான் 'எலெக்சன்' இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரசாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரசாரத்தையும் செய்யவில்லை என செய்தியாளர்கள் முன் உரையாற்றினார்.

Advertisement

Advertisement