• Dec 27 2024

ஸ்டாரை விழுங்கியதா சுந்தர்.சியின் அரண்மணை 4..? மொத்த கலெக்சன் இவ்வளவு தானா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து வெளியான படங்கள் எதுவுமே ஹிட் ஆகாத நிலையில், ஏற்கனவே வெளியான படங்களை ரீ ரிலீஸ்  செய்து வந்தார்கள். அதிலும் விஜய் நடித்த கில்லி படம் கிட்டத்தட்ட 30 கோடி வரையில் வசூலில் சாதனை படைத்திருந்தது.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு கம்பேக்காக அமைந்த படம் தான் சுந்தர். சி இயக்கிய அரண்மனை 4. இந்த படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் கொடுத்த படமாக அமைந்துள்ளது. இதற்கு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதோடு, வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.

இதையடுத்து, இம்மாதம் நடிகர் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் வெளியானது. இந்த படம் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் எமோஷனலாகி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதல் நாளிலேயே இந்த படம் 3 கோடி ரூபா வரையில் வசூலித்து இருந்தது.


ஸ்டார் திரைப்படம் வெளியான நாளில் இருந்து இதுவரை 10 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது. ஆனாலும் அரண்மனை 4வது படத்தோடு ஒப்பிடும்போது ஸ்டார் படம் குறைந்த அளவிலேயே வசூலித்துள்ளது.


இந்த நிலையில், தற்போது வெளியான அரண்மணை 4 மற்றும் ஸ்டார் படத்தின் மொத்த கலெக்சனின் படி, அரண்மணை 4 படம் 55 கோடி வரை வசூலித்து உள்ளதாம். அதுபோல கவின் நடித்த ஸ்டார் திரைப்படம்  இதுவரையில் 10 கோடி வரை வசூலித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement