• May 25 2026

CM விஜய்யின் கடைசி படம் ரெடி.! உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 


குறிப்பாக, சில சென்சார் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக திரைப்படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதாவது, முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என ‘புக் மை ஷோ’ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருவதாலும், அதனை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. விஜய் அரசியலுக்கு சென்ற பிறகும் அவரது திரை வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது இந்த எதிர்பார்ப்பின் மூலம் தெளிவாகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் நாள் தற்போது ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement