• May 25 2026

ஜீவா – அஞ்சலி கூட்டணியின் தேர்வு சரியானதா? இயக்குநர் வசந்தபாலன் எடுத்த புதிய ரிஸ்க்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கவனத்தை ஈர்க்கும் கூட்டணி உருவாக உள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன், தனது தனித்துவமான சமூக நிழல் படைப்புகளுக்காக அறியப்பட்டவர். 

‘வெயில்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இவர், சமீபத்தில் ‘அநீதி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்நிலையில், வசந்தபாலன் அடுத்ததாக புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய படத்தை கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


2007-ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த பிறகு, சுமார் 19 ஆண்டுகள் கழித்து ஜீவாவும் அஞ்சலியும் மீண்டும் ஒன்றாக திரையில் இணைவது தான் இதன் சிறப்பு அம்சம் என்பதாகும். அந்த படம் தமிழ் சினிமாவில் தனித்த இடம் பிடித்த நிலையில், இந்த புதிய கூட்டணியும் அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அஞ்சலி ஏற்கனவே வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ மற்றும் ‘அரவான்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் .. அந்த படங்களில் அவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. அதே இயக்குநருடன் மீண்டும் இணைவது அவருடைய ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், வசந்தபாலன் – ஜீவா – அஞ்சலி கூட்டணி இணையும் இந்த புதிய திரைப்படம், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் சமூக தாக்கம் கொண்ட படைப்பாக அமையலாம் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Advertisement

Advertisement