ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அழகு, ஃபேஷன் மற்றும் பெண்களின் தன்னம்பிக்கை குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன.

அந்த விழாவில் பேசிய அவர், “அழகு, ஃபேஷன் எல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் எப்போதும் மாறாத ஒன்று. நம்மைச் சுற்றியிருப்பவர்கள் ‘இவ்வளவு போதும்’ என்று சொல்லலாம். ஆனால் நமக்கு என்ன தேவை, எது சரி என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
மேலும், “Satisfy ஆவது வேறு, Settle ஆவது வேறு. வாழ்க்கையில் நமக்கு பிடித்த விஷயங்களை தேர்வு செய்து முன்னேற வேண்டும். சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘இதுதான் அழகு’ என்ற வரையறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.
ப்ரியா பவானி சங்கரின் இந்த பேச்சு குறிப்பாக இளம் பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளிப்புற அழகை விட மனதளவிலான தன்னம்பிக்கையே ஒருவரை உண்மையாக அழகாக காட்டும் என்ற அவரது கருத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் அவரது பேச்சை பகிர்ந்து, “இது இன்றைய தலைமுறைக்கு தேவையான முக்கியமான கருத்து” என பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!