பிரியாமணி தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு அப்டேட்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகின்றன.

2003 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைதுசெய்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியாமணி, தனது இயல்பான நடிப்பால் விரைவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் 'அது ஒரு கனாக்காலம்', 'மது' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
தேசிய விருது பெற்ற நடிகையாகவும் அறியப்படும் பிரியாமணி, தற்போது பல்வேறு மொழித் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது ஸ்டைலான தோற்றம் மற்றும் அழகிய லுக்கால் ரசிகர்களை கவர்ந்துள்ளன. “வயது ஏற ஏற அழகு கூடிக்கொண்டே போகிறது”, “எப்போதும் போல கவர்ச்சி மற்றும் கிளாஸ்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ட்ரெண்டாகி வருகின்றன.
Listen News!