• Jun 12 2026

விஜய் கட்சியில் ராகவா லாரன்ஸ்? தாயார் கொடுத்த ‘சிக்னல்’ தான் திருப்புமுனையா?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.

த.வெ.க. சார்பில் அவர் போட்டியிடப்போகிறார் என சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளைத் தொடர்ந்து, “நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்” என்ற வதந்திகள் அதிகரித்தன. இதுகுறித்து உண்மை நிலையை விளக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை ஜூன் 11 காலை 9.30 மணிக்கு வெளியிட இருப்பதாக லாரன்ஸ் முன்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி அந்த அறிவிப்பு ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து “உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் நான் ஒரு முக்கியமான அடியை எடுக்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இதனால் அவரது அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

மேலும், அவர் வெளியிடவுள்ள காணொளியில் தனது அரசியல் பார்வை, வாழ்க்கையில் அரசியல் எப்படி உருவானது, தாயின் தாக்கம் மற்றும் தனது பயணத்தில் நடந்த முக்கிய அனுபவங்கள் ஆகியவற்றை மனம் திறந்து பகிரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“எதையும் எதிர்பார்க்காமல் நேர்மையாக செயல்படுங்கள். எனக்கு உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவை” என அவர் குறிப்பிட்டிருப்பது, அவரது அடுத்த கட்ட நகர்வு குறித்து ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து இருந்தது.

இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய எக்ஸ் தள  பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் அரசியல் பயணத்தில் நுழைய உள்ளதாகவும், அதற்கு தன்னுடைய தாயார் ஆசிர்வாதம், அனுமதி என்பவற்றை வழங்கியதாகவும், தான் உடனே அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விஜய் போலவே குட்டி கதை ஒன்றின் மூலம் இந்த அரசியல் அறிவிப்பை அறிவித்துள்ளதோடு, தான் இதுவரையில் அரசியலில் நுழையாமலே மக்களுக்காக சேவை செய்தவன் என்று கூறியுள்ளார். 

அது மட்டும் இல்லாமல் தன்னுடன் இருந்த சக இளைஞர்களை காட்டி இவர்களை ஒரு வயதிலிருந்து வளர்த்து வருகின்றேன். தற்போது இவர்கள் எனது துணையாக இருக்கின்றார்கள் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

தற்போது ராகவா லாரன்ஸ் அரசியலில் நுழைந்துள்ளதும் அவர் விஜயின் கட்சியில் இணைந்துள்ளதும் ரசிகர்களுக்கு பெரிதும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. தற்போது பலரும் அவருடைய அரசியல் வருகைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement