• Jul 19 2025

லைலாவின் குடும்ப க்ளிக்ஸ்...!அழகில் சொக்கிப் போன ரசிகர்கள்...!

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

90களில் தமிழ் சினிமாவை தனது அழகும், நடிப்பும் மூலம் கலக்கிய நடிகை லைலா, தங்கள் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு திரையுலகுக்கு மீண்டும் வருகை தந்த லைலா, தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து வருகின்றார்.


1996ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான துஷ்மன் துனியா கா  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான லைலா, பின்னர் தமிழில் முதல்வன், நந்தா, மௌனம் பேசியதே, பிதாமகன், உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது அழகும், உணர்வுப்பூர்வமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

2006ஆம் ஆண்டு மெஹ்தின் என்பவரை திருமணம் செய்து கொண்ட லைலாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முன்னுரிமை கொடுத்த லைலா, ஒரு இடைவேளைக்குப் பிறகு சர்தார் திரைப்படத்தின் மூலம் திரும்பியுள்ளார்.


சமீபத்தில் தமது கணவர் மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த லைலா, மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வேகமாகப் பரவி, ‘அழகான குடும்பம்’, ‘எப்போதும் யங்’ என பல லைக் மற்றும் கருத்துக்களை  பகிர்ந்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement