• Dec 28 2024

விஜயை பார்க்கும் ஆவலில் சுவர் ஏறிக்குதித்த ரசிகர்கள்! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்றைய தினம் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் எதுவும் பேச வேண்டாம் என நினைத்து வந்த விஜய், இறுதியில் நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவது பற்றியும், அதில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீட் தேர்வு தேவையில்லாதது ஒன்று எனவும் அதிரடியாக பேசியிருந்தார்.

இதை தொடர்ந்து இந்த விருது விழாவில் மாணவிகள் விஜய்க்கு விதவிதமாக ரோஸ் கொடுத்து மகிழ்ந்தும் இருந்தார்கள். அத்துடன் விஜயின் புகைப்படங்களை தமது கைவண்ணத்திற்கு ஏற்ப  அவருக்கு பரிசாகவும் கொடுத்திருந்தார்கள்.


இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் இடம் பெறும் கல்வி விருது விழாவில் விஜயை பார்ப்பதற்காக சுவர் ஏறிக்  குறித்து மண்டபத்திற்கு சென்ற ரசிகர்களை, அதிரடியாக வெளியேற்றிய சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது இந்த விருது விழா பலத்த கட்டுப்பாடுகளுடனும், ரூல்ஸ் மற்றும் கண்காணிப்புக்கு கீழும் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் விஜய் ரசிகர்கள் சுவர் ஏறிக் குதித்து விஜயை பார்க்க சென்றுள்ளார்கள் எனினும் அவர்கள்  தடுக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement