• Dec 26 2024

பிக் பாஸ் மீது நேரடியாகவே பழி போட்ட பெண் போட்டியாளர்.. அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்..! கமலுக்கு சரியான பதிலடி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது பரபரப்பு சம்பவமொன்று இடம்பெறுள்ளது.

பிக் பாஸ் தான் எனக்கு தடையானவர், நான் மற்றவர்களுக்கு செஞ்சது புல்லி என்றால் நீங்கள் எனக்கு செய்தது புல்லி என போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் மீது குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் விதம் விதமான டாஸ்க்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 'நீங்கள் பிக் பாஸ் டைட்டில் பட்டம் வென்றால் உங்கள் வெற்றிக்கு சாதகமாக இருந்தது யார்? தடையாக இருந்தது யார்? என இருவரை கூற வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்பட்டது.

இதன்போது பேசிய பூர்ணிமா, 'எனது வெற்றிக்கு சாதகமாக இருந்தது மாயா தான், எனக்கு 50 லட்சம் பரிசு கிடைத்தால் அதை அவருக்கு கொடுத்து விடுவேன்' என்று தெரிவித்தார். 


மேலும், எனது வெற்றிக்கு தடையாக இருந்தது பிக் பாஸ் தான் என்று கூற சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி மேலும் அவர் கூறுகையில், 

நான் விக்ரமை பார்த்து காக்ரோச் என்ற பட்டம் கொடுத்தது தவறுதான், அதற்காக நான் மன்னிப்பு கேட்டேன், ஆனால் எனக்கு விருப்பமே இல்லாமல், எனக்கு தவளை என்ற டேக் கொடுத்தது பிக் பாஸ் தான்.


அனன்யா அதை எனக்கு கொடுத்து இருந்தாலும் அதற்கு காரணம் நீங்க தான். அதை என் தலையில் விருப்பமின்றி நான் இரண்டு நாள் வச்சிருந்தன்.. இப்படி இந்த வீட்டுல பல முறை வருத்தப்பட்டேன்.

அத்தோடு, இங்கு பூமர் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நினைச்சன். ஆனா நீங்களே பூமர் அங்கிள் என்ற ஒரு டேக்கை கொடுத்து அனுப்பி விட்டீர்கள். நான் மற்றவர்களுக்கு செய்தது புல்லி என்றால். நீங்கள் எனக்கு செய்தது புல்லி தான்.

இதன் காரணமாக எனக்கு மற்றவர்களை விட நீங்க தான் அதிக தடையாக இருந்திங்க... ஆனால் நான் அதையும் மீறி நான் டைட்டில் பட்டம் வென்றுள்ளேன்' என பிக் பாஸ் மீது நேரடியாகவே பழி போட்டுள்ளார் பூர்ணிமா...


Advertisement

Advertisement