• Dec 27 2024

திடீரென பற்றியெரிந்த கார்- பிரபல சொகுசு வாகன நிறுவனத்துடன் சண்டைக்குப் போன கீர்த்தி பாண்டின்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் வாகனங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதிலும்  இந்திய சந்தையிலும் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, எலக்ட்ரானிக் ரக டூவீலர் மற்றும் ஃபோர் வீலரை அறிமுகப்படுத்தி வருகிறது.

 அந்த வகையில் எம் ஜி நிறுவனத்தை சேர்ந்த சொகுசு கார் ஒன்றை, கீர்த்தி பாண்டியன் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர் வாங்கிய நிலையில், இந்த கார் தீப்பிடித்து எறிந்துள்ளது.


இது குறித்து சரவணகுமார் போட்டிருந்த பதிவில் "நான் mg zs ev கார் ஒன்றை கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பு, ரூபாய் 26.61 லட்சம் கொடுத்து வாங்கி இருந்தேன். இந்த காரை என்னுடைய வீட்டின் முன்பு உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.

  இதனைப் பார்த்த என் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், என் குடும்பத்தினரும் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறையினருக்கும், தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் 30 நிமிடத்தில் வந்து தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து MG நிறுவனத்திற்கு நான் தகவல் கொடுத்த போதிலும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை என தன்னுடைய மன உளைச்சலை வெளிப்படுத்தி இருந்தார்.


 சரவணகுமாரின் இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள நடிகை கீர்த்தி பாண்டியன், "இது தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணக்குமார் என்பவரின் கார். அவர் வீட்டில் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உள்ளனர். இந்த எதிர்பாராத விபத்தின் போது வயதானவர்களோ.. சிறுவர்களோ... பக்கத்தில் இருந்தால் என்ன ஆவது? இது மிகவும் ஆபத்தான ஒன்று. எனவே அவரின் மின் அஞ்சலுக்கு பதில் சொல்லுங்கள். பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு எம் ஜி நிறுவனத்திடம் கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement