• Dec 25 2024

பிக்பாஸ் தமிழ் வீட்டில் பாலியல் வன்கொடுமையா? மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த இளம்பெண்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் பிக் பாஸ் செட் போடப்பட்டு இருக்கும் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்த செட் கலைக்கப்படாமல் பிக் பாஸ் மலையாளம் நிகழ்ச்சிக்கு ஒரு சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இதை பராமரிப்பு செய்வதற்காக சிலர் பணி செய்து கொண்டு இருப்பார்கள் என்பதும் அந்த வகையில் இந்த வீட்டில் பணி செய்து கொண்டிருந்த செக்யூரிட்டி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை நடந்ததாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் செட்டில் வேலை செய்யும் கிரண் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார் என்றும் அதனால் இருவரும் பழகினோம் என்றும் தன்னை திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடன் வாழ மறுக்கிறார் என்றும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் கூறிய கிரண் கூறியபோது ’நாங்கள் இருவரும் ஒரே செட்டில் வேலை செய்கிறோம் என்பது உண்மைதான், அவரை எனக்கு நன்றாக தெரியும், ஆனால் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்ற வாக்குறுதி கொடுக்கவில்லை, திருமணமும் செய்யவில்லை என்று கூறினார்.

மேலும் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன என்றும், தன் மீது பொய்யான புகாரை அளித்துள்ளார் என்றும், விஜய் டிவி பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக போலி புகாரை அளித்துள்ளார் என்றும், எந்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றும் கிரண் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement