கைதி ,விக்ரம் ,மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நேற்று முன்தினம் அஜித் நடிப்பில் வெளியாகிய குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்து மாஸ் காட்டி ரசிகர்களின் மனதை வென்றார். வில்லனாக மாத்திரமின்றி இவர் ஹீரோவாகவும் நடித்து வந்தார். மேலும் இவரது குரலிற்கு மயங்காத பெண்களே இல்லை.
இவர் தற்போது டிக்கிலோனா படம் எடுத்த கம்பெனியில் இவர் ஹீரோவாக கமிட்டாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே டீம்ல இருக்கும் விக்கினேஷ் எனும் புது இயக்குநர் படத்தினை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரேமலு நாயகி மமிதா பைஜூ அவர்களை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் நேரம் மற்றும் சம்பள பேச்சு வார்த்தைகள் கை கூடி வந்தால் இவர் படம் நடிப்பதற்கு சாத்தியங்கள் இருக்கும் என அவர் தரப்பு வட்டாரங்கள் செய்தி வழங்கியுள்ளது.
Listen News!