கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் "ரெட்ரோ " திரைப்படம் வருகின்ற மே மாதம் முதலாம் தேதி வெளியாகவுள்ளது.இப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் நடித்துள்ளார். 65 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப் படத்தினை சூர்யா ஜோதிகாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளதுடன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து சிங்கம் புலி ,நாசர் ,ஜெயராம் ,கருணாகரன் போன்ற இசை பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளன.அண்மையில் நேர்காணல் ஒன்றில் படத்தின் இயக்குநர் நடிகர் ஜெயராம் குறித்து பேசியுள்ளார்.
மேலும் அவர் “ஜெயராம் சாரை அவரது இயல்பான நடிப்பிற்காகவே எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொடுக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் சிறப்பாக அதை அடுத்த இடத்துக்குக் கொண்டு போயிடுவார். அந்த வகையில் ‘பஞ்ச தந்திரத்தை மறக்கவே முடியாது. ஜெயராம் சாரை அணுகும் போது அவர் மகளின் திருமண வேலைகளில் பிசியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு வடிவேலு சாரைக்கூட யோசித்தோம். ஆனாலும், காத்திருந்து அவரை இந்த புராஜெக்ட்டுக்குள் கொண்டு வந்தோம்.” என கூறியுள்ளார்.
Listen News!