• Jul 29 2026

இனியாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் கோபி..? பாக்கியாவுக்கு கிடைத்த பேச்சு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஏற்கனவே இனியா போலீஸ் பிரச்சனையில் சிக்கி ராதிகாவால்  காப்பாற்றப்பட்ட விடயம் கோபிக்கு தெரிந்த நிலையில், அவர் இரவோடு இரவாகவே செழியனிடம் நடந்தவற்றை கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், பாக்கியா வீட்டுக்குச் சென்ற கோபி, எல்லாம் உன்னால தான் ஒழுங்கா பிள்ளையை கவனிக்க இல்ல என்று சொல்லி இனியாவை தன்னுடன் வருமாறு அழைக்கின்றார்.


அதன்படி நான் உன்னை நல்லா பார்த்துக் கொள்கிறேன் என்று இனியாவின் கைகளை பிடித்து அழைக்க, ஈஸ்வரி அதை தட்டி விட்டு வெளியே போகுமாறு சொல்லுகிறார்.

ஆனாலும் கோபி விடாப்படியாக நிற்க இனியா தான் வரவில்லை அம்மா கூடவே இருக்கேன் என்று சொல்லுகிறார். இதனால் ராமமூர்த்தியும் அவரை வெளியே போகுமாறு சொல்லி ஏதாவது நாடகம் போட்டு வீட்டுக்குள்ள வாறதுலேயே குறியா இருக்கிறான்  என்று பேசுகிறார்கள். 

இறுதியில் கோபி தலை குனிந்து வீட்டை விட்டு வெளியே போகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement