• Dec 27 2024

மஞ்சள் உடையில் தங்கம் போல் ஜொலிக்கும் அர்ஜுன் மகள்..! தடபுடலாக நடக்கும் ஹல்தி கொண்டாட்டம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் ஆக காணப்படும் அர்ஜுன், தனது மகளுக்கும் பிரபல நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் எதிர்வரும் திங்கட்கிழமை திருமணம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகின்றது.

நடிகர் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா, விஷால் நடித்த பட்டணத்து யானை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்திலும் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யாவும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகளும் காதலித்து வந்த நிலையில், இவரது காதல் விவகாரத்திற்கு அர்ஜுன் வீட்டாரும் தம்பி ராமையா வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.


இதை தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 10ஆம் தேதி சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

இதை அடுத்து ஜூன் 14ஆம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளார்கள். இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால் ஐஸ்வர்யாவிற்கு ஹல்தி நிகழ்ச்சி இன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அதில் மஞ்சள் உடையில் அழகாக தேவதை போல் இருக்கும் ஐஸ்வர்யாவின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement