சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மாஸ் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் "கூலி" திரைப்படம், வெளிவருவதற்கு முன்பே பல சாதனைகளை முறியடித்து வருவது போல் தெரிகிறது. ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்க, இந்தப் படம் இதுவரை இல்லாத வகையில் வெளிநாட்டில், குறிப்பாக அமெரிக்காவில் அதிகளவு வரவேற்பு பெற்றுள்ளது.
"கூலி" படம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வியாபாரத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், "கூலி" படம் 500 கோடிக்கு மேலாக வியாபாரம் செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரஜினியின் திரைப்பட வரலாற்றில் என்றும் இல்லாத சாதனை.
2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி, "கூலி" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் "கூலி" படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்போது வெளியாகிய தகவலின்படி, அமெரிக்காவில் இடம்பெறும் பிரீமியர் ஷோவுக்கான டிக்கெட்டுகள் $500,000 (அதாவது ரூ. 4.2 கோடி) விற்பனை ஆகியுள்ளது.
Listen News!