• Jul 29 2025

தனுஷின் பிறந்த நாள் அன்று வெளியான சிறப்பு போஸ்டர்...! ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்..!

Roshika / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தனது பிறந்தநாளான இன்று , ரசிகர்களுக்குச் சிறப்பான பரிசொன்றை வழங்கியுள்ளார். தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் ‘இட்லி கடை’, இது அவருடைய 52-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷ் எழுதி இயக்கி, முன்னணி கதாநாயகனாகவும் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். இசை அமைப்பில் அவர் அனுபவமிக்க கூட்டாளியான ஜி.வி.பிரகாஷ் குமார், இப்படத்திற்கான இசையை வழங்குகிறார். 'இட்லி கடை' திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ‘இட்லி கடை’ படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த போஸ்டர்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுஷின் புதிய லுக் மற்றும் வித்தியாசமான இருக்கின்றது.  இந்த படத்தின் தனித்துவத்தையும்  காண்பிக்கிறது.


சமூக வலைத்தளங்களில் IdliKadai மற்றும் Happy Birthday Dhanush போன்ற ஹாஷ்டேக்கள் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்களும் சினிமா ரசிகர்களும், இப்படம் ஒரு இனிமையான கதையோடும் வித்தியாசமான கதாபாத்திரங்களோடும் அமையும் என உறுதியாக எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement