தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்று வரும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை ருக்மினி வசந்த். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘டிராகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் அவர், சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளார். குறிப்பாக அவரது தோற்றம் மற்றும் ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதற்கிடையில், இணையத்தில் அவரது சில கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேகமாக பரவ தொடங்கின. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த ருக்மிணி வசந்தின் இந்த திடீர் மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த நடிகை, அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்கள் என கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும், “எனது பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள் முற்றிலும் போலியானவை. இது தனியுரிமையை மீறும் செயல். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யாரும் இதை பகிரவோ ஆதரிக்கவோ வேண்டாம்.” என அவர் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!