• May 23 2026

‘கருப்பு’ மீது சூர்யாவுக்கே நம்பிக்கை இல்லையா? வெற்றிவிழாவில் நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

shali / 6 hours ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், R. J.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. 2026ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக ரசிகர்கள் கொண்டாடி வரும் இப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும், ரசிகர்களின் ஆதரவு படத்திற்கு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்தப் படம், அதிரடி உணர்ச்சி மற்றும் மாஸான காட்சிகளின் கலவையால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் நடிகர் சூர்யா பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் அவர், “இந்தப் படம் மிகக் குறுகிய காலத்தில் ஒப்புக்கொண்ட ஒரு படம். எடிட்டிங் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, எனது உதவியாளர் கூறிய ஆலோசனையின் பேரில், ஐந்து மாதங்களுக்கு பிறகு கிளைமாக்ஸ் பாடலை மாற்றி மீண்டும் படம் பிடித்தோம். 

அந்த முடிவு தான் இன்று ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.” எனத் தெரிவித்தார். சூர்யாவின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement