• Dec 26 2024

மகள் மறைவால் இடிந்து போய் இருக்கும் இளையராஜா... டுவிட்டரில் உருக்கமாக வெளியிட்ட புகைப்படம் இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று இலங்கையில் காலமானார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இளையராஜா தனது டுவிட் பக்கத்தில் மனம் கலங்கி ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.


கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று 5:30 மணியளவில்  இலங்கையில் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இவர் 47 வயதான நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


அவரின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த, பல்வேறு பிரபலங்களும் வந்த வண்ணம் உள்ளனர். இதன்படி இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாம்.


தனது மகளை இழந்த சோகத்தை வெளியில் சொல்லவும் முடியாமல் கதறி அளவும் முடியாமல் ஒரு தந்தையாக இளையராஜா அவர்கள் படும் பாடு அவருக்கு மட்டுமே தெரியும்.  தந்து பாசமான மகளை இழந்த சோகத்தில் இருக்கும் இவர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் அன்பு மகளே!! என குறிப்பிட்டு பவதாரணி சின்ன வயதில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 

இதோ அந்த புகைப்படம்...  


Advertisement

Advertisement