தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக திகழும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் 'சிக்கந்தர்'. இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் ராஷ்மிகா, சத்யராஜ், காஜல் அகர்வால் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.
'சிக்கந்தர்' திரைப்படம் ஹிந்தி மொழியில் பிரம்மாண்டமாக வெளியானது. எனினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. விமர்சகர்களின் கருத்துக்களும் இப்படத்தின் மீது எதிர்மறையாகவே காணப்பட்டது.
பெரும்பாலான ரசிகர்கள், "இது முருகதாஸின் படம் தான் என்று நம்பவே முடியவில்லை" என்று விமர்சித்தனர். முருகதாஸின் கடந்த படங்களைப் போல தனித்துவம் இல்லாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனமாகக் காணப்பட்டது. இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் 'சிக்கந்தர்' படத்தின் தோல்வி குறித்து நேர்காணலில் உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "அதிகளவான பணத்தை செலவு செய்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். எனினும், இயக்குநர் முருகதாஸ் படப்பிடிப்பின் போது கடுமையாக கட்டுப்படுத்தினார். இப்படி எடுக்க வேண்டும், அப்படி மாற்ற வேண்டும், கதையை திருத்த வேண்டும் எனத் தொடர்ந்து டாச்சர் செய்தார். இதனால் தான் படம் இவ்வளவு நஷ்டம் அடைந்து கொண்டது." எனக் கூறியுள்ளார்.
'சிக்கந்தர்' படத்தின் தோல்விக்குப் பிறகு, முருகதாஸ் மீண்டும் தனது முந்தைய புகழுக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது. அத்துடன், அவரது கதை சொல்லும் திறன் மீண்டும் ஒளிருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!