• Mar 01 2025

மாரி செல்வராஜ்ஜின் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி – வெளியான உண்மை இதோ!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ், சமூக கருத்துகளை வலுவாக பிரதிபலிக்கும் இயக்குநர்.இவரது படங்கள் பெரும்பாலும் சமூகத்துக்கு முக்கியமான செய்திகளை வெளிப்படுத்துகின்றனவாக அமைகின்றன. ஆனால், அண்மையில் அவர் இயக்கவிருந்த புதிய படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூறியபோது, அவரால் அதனை ஏற்க முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் தனது திரைப்பட தேர்வுகளில் எப்போதும் தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றும் நடிகர். மாரி செல்வராஜின் படம் அரசியல் சார்ந்த கருத்துகளை கொண்டிருக்கும் என்பதால், அதில் நடிக்க ரஜினி தயங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும், அரசியல் ரீதியாக ரஜினியின் முடிவுகள் எந்த அளவிற்கு அவருடைய திரை உலக பயணத்தினை பாதிக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.


இந்த படத்தின் கதைக்களம் அரசியல் சார்ந்த சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது. சில தகவல்களின்படி, இது அரசியல் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்பதால், ரஜினி இதில் நடிக்க மறுத்துள்ளார். இந்த முடிவு, அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement