பிரபல நடிகை சனம் ஷெட்டி ‘Bad Girl’ படத்தின் விளைவுகளை பற்றி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், இந்த படம் பெண்களுக்கு தவறான சுதந்திரத்தை வலியுறுத்துவதாகவும், அது சமூகத்துக்கு நல்லது அல்ல என்றும் கூறினார்.
மேலும் சனம் ஷெட்டி, "பெண்கள் சிகரெட் புகைப்பதும், மது அருந்துவதும் சுதந்திரம் இல்லை. உண்மையான சமத்துவம் என்பது ஆண்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும் பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், சமூக மாற்றத்தை தவறான வழியில் காட்டுவது சரியல்ல" என்று தெரிவித்தார்.
அத்துடன், "நாம் ஒரு ஹீரோவை எவ்வாறு மரியாதை கொடுக்கின்றோமோ அதேபோல் ஹீரோயினுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். மேலும் , ஒருவரின் சுதந்திரம் என்பது பிறரை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
சனம் ஷெட்டி, "Bad Girl பட டீசரை பார்த்தவுடன் எனக்கு தவறாக தோன்றியது. இது சமூகத்தில் தவறான கருத்தை பரப்புகிறது என உணர்ந்தேன். பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்க வேண்டும், ஆனால் அது சமூக நலத்துக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
சனம் ஷெட்டியின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Bad Girl’ படம் உண்மையில் பெண்களுக்கு நல்லதா, சமூகத்திற்கு தீங்கானதா என்பதில் விவாதங்கள் எழுந்துள்ளன. பெண்கள் சுதந்திரம் என்பது சமத்துவத்தை அடைய வேண்டியது எனவும் கூறப்பட்டுள்ளது.
Listen News!