வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கான இசை பணிகள் தற்பொழுது தொடங்கியுள்ளன. குறிப்பாக, இப்படத்தின் பாடல் அமைக்கும் பணிகளை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் துவங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரம்மாண்டமான படம் ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் என்பதால், இசை மற்றும் பின்னணி ஓசைக்கு மிகுந்த முக்கியத்துவம் காணப்படுகிறது. அதனால்தான் வெற்றிமாறன் இந்தப் படத்திற்காக கடினமான உழைப்பை மேற்கொள்ளுகின்றார்.
மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் ஏற்கனவே ஆடுகளம், அசுரன், விடுதலை போன்ற தரமான படங்கள் வெளியான நிலையில், "வாடிவாசல்" திரைப்படம் மூலமும் இந்த கூட்டணி அனைவரையும் மிரட்டுகின்ற வகையில் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
அத்துடன் "வாடிவாசல் படத்தின் பாடல் அமைப்புகளை நாம் ஆரம்பித்து விட்டோம். இது ரசிகர்களுக்கு ஒரு மாஸ்டர் பீஸ் இசை அனுபவமாக இருக்கும்," என்று ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது சூர்யா இப்படத்தில் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது .
சூர்யாவின் நடிப்பு, வெற்றிமாறனின் வலுவான கதை அமைப்பு மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை என்பன சேர்ந்து தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை உருவாக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
Listen News!