சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று , முத்து தன்ர தம்பிக்காக என்னவென்றாலும் செய்வேன் என சொல்லுறான்.அதுக்கு மனோஜ் உடனே ஆமா இவர் பெரிய மல்டி மில்லேனர் என்று சொல்லி நக்கல் அடிக்கிறான். பிறகு மனோஜ் ரவிக்கு உன்ட மாமியார் வீட்ட இருந்து பணம் வாங்குறதில உனக்கு என்ன பிரச்சனை என்று கேக்குறான். அதுக்கு ரவி எனக்குனு ஒரு கெளரவம் இருக்கு நான் அப்படி எல்லாம் வாங்க மாட்டேன் என்று சொல்லுறான்.
உடனே முத்து அப்படி சொல்லுறா ரவி என்கிறான். பிறகு மனோஜ் முத்தின்ர பேச்சைக் கேக்காதா என்று சொல்லுறான். அதைத் தொடர்ந்து மனோஜும் முத்துவும் சண்டை பிடிக்கிறார்கள். பின் ரோகிணியும் ஸ்ருதிக்கு இது நல்ல ஜோசனை தானே பிறகு ஏன் ரவி வேணாம் என்கிறார் என்று சொல்லுறாள். அதுக்கு பிறகு மீனா ரவி தன்ர உழைப்பில ரெஸ்டாரெண்ட் கட்டவேணும் என நினைக்கிறான் அதில ஒன்னும் தப்பிலையே என்று சொல்லுறாள்.
அதுக்கு ஸ்ருதி தப்பில்ல தாங்க அதுக்காக எவளவு நாள் தான் இப்படியே இருக்கிறது என்கிறாள். பிறகு மீனா அதுக்கென்று ஒரு நேரம் வரும் ஸ்ருதி என்கிறாள். அப்படியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். அப்ப முத்து வந்து மீனாவிடம் பெண்கள் மாநாடு முடிஞ்சுதா எனக் கேக்கிறார்.
பிறகு காலையில மீனாவுக்கு ஓடர் ஒன்று கிடச்சிருக்கு அத முத்துக்கு சொல்லி சந்தோசப்படுறாள். அப்புடியே ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணினம். அத விஜயா பாத்திட்டு நடுவீட்டில இருந்து என்னடா பண்ணுறீங்கள் என்று கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!