• Dec 26 2024

நான் ரெடி.. ஆனால் விஜய் ஒப்புதல் அளிக்க வேண்டும்! லியோ 2 குறித்து லோகேஷ் பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் இறுதியாக வெளிவந்த படங்கள் தான் வாரிசு மற்றும் லியோ. இவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டில் வெளியான லியோ திரைப்படம் லோகோஸ் கனகராஜ் இயக்கத்தில், மிகுந்த மத்தியில் எதிர்பார்ப்புகளுக்கு  மத்தியில் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.


இதற்கிடையில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த விஜய் அடுத்ததாக, தளபதி 69 படத்துடன் தனது சினிமா வாழ்க்கையை விடுத்து முழு நேரமாக அரசியலில் இறங்க இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

கோட் திரைப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு படங்களில் நடிகர் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 


குறித்த படத்தில் மீனாட்சி சவுதாரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், வைபவ் என ஏராளமான நட்சத்திரங்களுடன் மறைந்து போன விஜயகாந்தையும் AI தொழில்நுட்பத்தினால் படத்தில் இணைத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஸ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தொடர்பில்  பேசியுள்ளார்.

அதாவது, லியோ 2வை இயக்க நான் தயார். ஆனால் நடிகர் விஜய் அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும். நேரம் காலம் எல்லாம் கூடி  வந்தால் சினிமாவில் எதுவுமே சாத்தியம் தான் என்று அவர் கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement