• Dec 25 2024

எனக்கு எப்பவுமே ஸ்ரீ பாப்பா தான்..! அனிதா அக்கா பிக் பாஸ் போய் இருந்தா அடிதடி தான்! வனிதாவின் எமோஷனல் பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் உள்ள நடிகைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதன் பிற்பாடு மிகவும் பிரபலமானவர் நடிகை வனிதா.

தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் கலையுலக வாழ்வாக இருந்தாலும் சர்ச்சைகளுக்கு  பெயர் போனவர். அவர் சமீபத்தில் யூடியுப் சணல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,

எனது வீட்டினைப் பொறுத்தவரையில் சின்ன வயதில் அம்மா அப்பாவிடம் நான் நல்லா அடி வாங்கியுள்ளேன். ஸ்ரீபாபா ரொம்ப சுட்டிப்  பொண்ணு. என்றும் தனிப்பட்ட விடயம் என்று உங்கள் வாழ்வில் உண்டா என கேட்கப்பட்டதற்கு, தனிப்பட்ட விடயம் என்று எதையும் நான் வைத்திருப்பது கிடையாது. 


இன்று இங்க நடப்பதை இன்னொரு இடத்தில் அப்படியே கொட்டி விடுவேன். அம்மா கூட பல தடைவ எல்லா விடத்தையும் உளருகிறாய் என திட்டியுள்ளார். ஏன் எனது குழந்தைகளிடம் கூட எல்லா வற்றையும் ஓபனாக கூறிவிடுவேன்.

சில வேளைகளில் அவை பிரச்சனையாகிவிடும் அதைப்பற்றி நான் பொருட்படுத்துவதில்லை என்றார்.


பிக்பாஸ் நிகழ்சிக்கு நீங்கள் செல்லாவிட்டால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்டதற்கு, சொல்லவே முடியாது சும்மா ஒரு நடிகையாக வந்து சென்றிருப்பேன். இவ்வளவு மக்களின் அன்பு, அரவணைப்பு, வனிதா ஆர்மி இதெல்லாம் கிடைத்திருக்கவே முடியாது.

என்னைவிட என்னோட அக்கா அனிதா பிக்பாஸ் போய் இருந்தால் நான் எல்லாம் சத்தம் தான் போட்டிட்டிருந்தேன் அவள் எல்லாம் அடிதடி தான் என்று குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement