• Dec 26 2024

நானெல்லாம் அந்த ஜாதி..! பிளாக் படத்தின் பிரஸ் மீட்டிங்கில் ஜீவா பேசியது வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, ராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் ஜீவா. இவர் நடிகராக மட்டும் இல்லாமல் வெற்றி படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் இன் உரிமையாளர் சௌத்ரியின் மகனும் ஆவார். 

இவர் கற்றது தமிழ், ஈ போன்ற மிகவும் ராவான சப்ஜெக்ட் படங்களையும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார். அத்துடன் டிஸ்யூம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்து மார்க்கெட் உள்ள நடிகராக தன்னை மாற்றிக் கொண்டார்.

இவர் நடித்த படங்களில் என்றென்றும் புன்னகை, கோ உள்ளிட்ட படங்கள் என்றைக்கும் எவர்கிரீன் படங்கள் ஆகவே காணப்படுகின்றன. ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரில்லர் திரைப்படம் தான் பிளாக். இந்த படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜீவாவின் பேட்டி ஒன்று தற்போது வைரல் அதிவருகிறது. அதன்படி ஜீவா கூறுகையில், பிளாக் படம் மிகச் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். அதனால் அந்த அளவிற்கு ஏற்ற தியேட்டர்களில் தான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ரொம்பவும் காலதாமதம் ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். தீபாவளிக்கு நிறைய படங்கள் ரிலீஸ் ஆகுது. எனவே இப்போதே ரிலீஸ் செய்து விடலாம் என்று தான் ரிலீஸ் செய்தோம்.


இந்த படத்தின் வெற்றி எனக்கு நிறைய பொறுப்புகளை கற்றுக்  கொடுத்தது. குறிப்பாக நல்ல கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. டிஷ்யூம் படத்தில் நான் பேசிய வசனம் தான் 'நானெல்லாம் கைத்தட்டலுக்கு என்கிற ஜாதி..' எனவே மக்களின் பாராட்டை பெறக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

பிளாக் படம் முதல் வாரத்தை விடவும் இரண்டாவது வாரத்தில் அதிக தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு நாளைக்கு 100 காட்சிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இதனால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகின்றேன் என குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement

Advertisement