தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கொலை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மீனாட்சி சவுத்ரி. அதன்பின் பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சினிமாவில் குறுகிய காலத்திற்கு உள்ளையே தனக்கென தனி இடத்தை உருவாக்கிய கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஓடிடியிலும் இந்த படம் கொண்டாடப்பட்டது.
d_i_a
இதைத்தொடர்ந்து மட்கா, சங்கராந்திகி வஸ்துன்னம் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சாய் குமார், நரேஷ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படம் எதிர்வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி கோட் படத்தில் நடித்தது தொடர்பில் மனம் திறந்து பேசி உள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், கோட் படத்தில் நடித்த பிறகு, பலர் எனக்கு ட்ரோல் செய்ததால், நான் ஒரு வாரம் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், லக்கி பாஸ்கர் மூலம் எனக்கு அதிகமான பாராட்டுகள் வந்தன.
அப்போது தான், நான் இனிமேல் நல்ல படங்களில் நடிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்ற உணர்வு வரச்செய்தது என தெரிவித்துள்ளார் தற்போது இவர் வழங்கிய பேட்டி இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி கவர்ச்சியாக நடித்த போதும் அதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் லக்கி பாஸ்கர் படத்தில் குடும்பப் பெண்ணாக ஒரு குழந்தைக்கு தாயாக நடித்த மீனாட்சி சவுத்ரிக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!