தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் திகழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான படங்களில் இணைந்து நடித்தனர். 1969இல் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகும் ரஜினியும் கமலும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில், சைமா விருது விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைய உள்ளதாக அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளார். இந்த தகவல் கோலிவுட்டில் காட்டுத் தீ போல் பரவியது. அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணையுள்ளது.
துபாயில் நடைபெற்ற சைமன் விருது விழாவில் சிறந்த படத்திற்கான விருதை அமரன் வென்றது. அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளராக விருதைப் பெற்றுக் கொண்டார் கமல். இதன்போதே ரஜினியுடன் இணைவது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், தரமான சம்பவமா? இல்லையா? என்பதை ஆடியன்ஸ் தான் முடிவு செய்ய வேண்டும். நடக்கிறதுக்கு முன்னாடியே சம்பவம் தரமா இருக்கு என்றால் எப்படி? அவர்கள் தர தரவென இழுத்து விடுவார்கள்.
நான் ரஜினியுடன் இணைந்து ரொம்ப நாள் ஆச்சு.. இத்தனை நாள் விரும்பி பிரிந்து இருந்தோம்.. ஏனென்றால் ஒரு பிஸ்கட்டை பிரித்து இரண்டு பேருக்கும் கொடுத்துட்டு இருந்தாங்க.. ஆளுக்கு ஒரு பிஸ்கட் வேணும் என்று ஆசைப்பட்டோம். அதை வாங்கி நல்லா சாப்பிட்டோம்.. இப்போ மறுபடியும் பாதி பிஸ்கட் போதும் என்று முடிவு பண்ணிட்டோம்.. அதனால நாங்க மீண்டும் இணைகிறோம் என தெரிவித்தார்.
மேலும் எங்களுக்குள்ள போட்டி நீங்கள் ஏற்படுத்தியது தான்.. அது எங்களுக்கான போட்டியே இல்லை.. சான்ஸ் கிடைச்சதே பெரிய விஷயம்.. நாங்க ரெண்டு பேரும் முன்னுதாரணமாக இருக்கணும் என்று அப்பவே முடிவு பண்ணினோம்.. அப்படித்தான் அவரும் இருக்கின்றார்.. நானும் இருக்கின்றேன்.. இது பிசினஸ் ரீதியா ஆச்சரியமா இருந்தாலும் இது எப்போவோ நடக்க வேண்டியது தான். ஆனா இப்போ நடக்கிறத நினைச்சு சந்தோஷப்படுகிறோம் என்றார்.
Listen News!