விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றன. இதனாலையே போட்டி போட்டு பல சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் சிறகடிக்க ஆசை சீரியல், மகாநதி, பாண்டியன் ஸ்டோர் சீசன் 2, சின்ன மருமகள் மற்றும் சிந்து பைரவி ஆகிய சீரியல்கள் மிகவும் பிரபலமானவையாக காணப்படுகின்றன.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைக் களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடம் வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறி இருந்தது.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதன்படி, க்ரிஷ் தற்போது மீனாவின் அம்மா வீட்டில் காணப்படுவதால் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க மீனா முடிவு செய்துள்ளார். இதனால் சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலில் க்ரிஷுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று முத்துவிடம் சொல்லுகின்றார். இதனை ரோகிணி கேட்டு விடுகின்றார். இதுதான் தற்போது வெளியான கதைக்களம்.
எனவே க்ரிஷ் விஷயத்திலும் ரோகிணி விஜயாவிடம் முறையாக சிக்குவாரா? இல்லையா? என்பது தற்போது வரையில் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
Listen News!