மனோவியல் தளத்தில் புதிய முயற்சியாக உருவாகியுள்ள ‘ஈரப்பதம் காற்று மழை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், மூன்று வெவ்வேறு மனநிலைகளில் இருக்கும் நபர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வெற்றி, சுதர்ஷன் என்ற பாத்திரத்தில், மற்றவர்களின் கழுத்தில் செயின் காணும்போதெல்லாம் அதைப் பறிக்க வேண்டிய உந்துதலுடன் வாழும் மனநோயாளியாக நடிக்கிறார். கிஷன் தாஸ், கனி என்ற பாத்திரத்தில், நெடுஞ்சாலைகளில் கொள்ளை அடித்து வாழும் இளைஞராகக் காட்சியளிக்கிறார்.
தீப்தி ஓரின்டேலு, மேதினி என்ற பாத்திரத்தில், வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்ததால் உணர்வுகளை வெளிக்கொணராது வாழும் பெண்ணாக நடிக்கிறார். இந்த மூவரும் ஒரு கட்டத்தில் சந்திக்கையில், அவர்களின் உள்ளார்ந்த அவஸ்தைகள், அன்பு, வெறுப்பு, பயம், ஆவேசம் என அனைத்தும் வெடிக்கும் விதமாக கதை நகர்கிறது.
திரைப்படம் தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஈரப்பதம் காற்று மழை’ – தமிழ் சினிமாவில் தனித்துவம் கொண்ட கதையாக உருவெடுக்கக்கூடிய படைப்பாக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!